மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தாராபுரத்தை சேர்ந்தவர் வேலு இவரது மனைவி சுதா. சுதா வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வேலு சண்டை போட்டுக்கொண்டு உப்புத்துறை பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வேலுவின் தாயார் கடந்த இரண்டு தினங்களாக வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வேலு மனவேதனையுடன் இருந்தமையால் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து வேலு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வேலு வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது அவர் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தாராபுரம் காவல்துறையினர் வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.