கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது ஜெனிசிஸ் பிராண்டு கார்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் சொகுசு கார்கள் அனைத்துமே “ஜெனிசிஸ்” என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறன. இதன் கார்களான ஜி70, ஜி80 மற்றும் ஜி90 செடான் கார்கள் மட்டுமே சர்வதேச அளவில் பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் ஜி.வி 80 மற்றும் ஜி.வி 70 என்ற பெயரில் எஸ்.யு.வி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது.
ஜெனிசிஸ் பிராண்டில் தயாராக இருக்கும் எஸ்.யு.வி. மாடல் கார், சி.கே.டி வழியில் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படும் என்றும், ஜி.வி 80 மாடல் கார்கள் அனைத்தும் இடப்பக்க ஸ்டீரிங் கொண்டவையாக இருப்பதால் இறக்குமதி செய்யப்பட்டப் பின் ஸ்டீரிங்யை வலப்பக்கம் மாற்றி அமைத்து விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஜி.வி 70 கார் ஹூண்டாய் டக்சன் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருப்பதால் இதில் வலதுபக்க ஸ்டீரிங் கொண்ட கார்களாக உள்ளன. எனவே ஜி.வி70 மாடலை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து எவ்வித மாற்றம் இன்றி விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. விரைவில் இந்திய சாலைகளில் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்.யு.வி.கார்கள் வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.