ஹைதராபாத் கத்தரிக்காய் கறி
தேவையான பொருட்கள்:
விதையில்லாத கத்திரிக்காய் – 10
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
பால் – 1 கப்
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
பட்டை – 1
சோம்பு – 1 தேக்கரண்டி
கசகசா – 1 1/2 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 10
வேர்க்கடலை – 1 ஸ்பூன்
எள் – 1 தேக்கரண்டி
கொப்பரைத் தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கத்தரிக்காயின் காம்பை எடுக்காமல் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். கடாயில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, எள், கொப்பரைத்தேங்காய் துருவலைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு தக்காளி சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும். பின் பாலைச் சேர்த்து வேக விடவும்.
இதனுடன் உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை ஊற்றி நன்றாகக் கொதித்து, வந்ததும் இறக்கினால் சுவையான ஐதராபாத் கத்தரிக்காய் கறி தயார்!!!