Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10,000 நிவாரணம்…!!

வட கர்நாடகத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 28,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வட கர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயபுரா, தெலாகாபி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய எல்லையைத் தாண்டி கரைபுரண்டோடும் வெள்ளம் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். சுமார் 28 ஆயிரம் பேர் 174 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 36 ஆயிரத்து 290 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவம் மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

Categories

Tech |