Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்… “விரைவில் யுனெஸ்கோ நகரமாகும்”… கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவிப்பு…!!

ஹைதராபாத் நகரத்தை யுனெஸ்கோ பாரம்பரிய நகரம் என அங்கீகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட மொஸம்ஜாஹி சந்தையை நேற்று தெலங்கானா நகராட்சி நிர்வாக மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமராவ் திறந்து வைத்தார். மொஸம்ஜாஹி சந்தை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மஹ்மூத் அலி, தலசனி சீனிவாஸ் யாதவ், சபிதா இந்திரா ரெட்டி, வி. ஸ்ரீனிவாஸ் கவுடா, மக்களவை உறுப்பினர் கே. கேசவ ராவ், அசாவுதீன் ஓவைசி, சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங், மேயர் போந்து ராம்மோகன் போன்றோர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு பேசிய அமைச்சர் கே.டி. ராமராவ், “ஹைதராபாத் பழமையின் நீட்சியையும், புதியவற்றின் அதிர்வை கொண்ட ஒரு அழகான நகரமாகும். இந்த நகரம் யுனெஸ்கோவின் “பாராம்பரிய நகரம்” என்ற பெருமையை பெற வேண்டும். அதற்காக எங்கள் அரசு பாடுபடத்தயார். மேலும், மொஸம்ஜாஹி சந்தை 1933ல் கட்டப்பட்டது. ஆனால், தற்போது தெலங்கானா அரசு புதுப்பித்தல் திட்டத்தை எடுத்து சந்தையை மீட்டுள்ளது. இது போன்ற பாரம்பரிய அடையாளங்களை பராமரிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

Categories

Tech |