Categories
மாநில செய்திகள்

அமராவதியா , விசாகப்பட்டினமா? – பிசிஜி அறிக்கை

ஹைதராபாத்: அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினத்தை ஆந்திராவின் தலைநகராக உருவாக்கலாம் என அமெரிக்கவைச் சேர்ந்த பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம்  பிரிக்கப்பட்டது. பின்பு 10 ஆண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களின் தலைநகரமாக ஹைதராபாத் இருக்கும் எனவும் அதன் பிறகு தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகவே ஹைதராபாத் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 10 ஆண்டுகளுக்குள் ஆந்திர மாநிலம் தனது தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக சந்திர பாபு நாயுடு தலைமையிலான அரசு தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின்  முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெகன்மோகன் அரசு  ஜி.என். ராவ் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகர்களை பரிந்துரைத்தது. அதன்படி அமராவதி அரசியல் தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் அறிவித்தார்.

ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் வழங்கிய விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், பாஸ்டன் கன்சல்டிங் என்ற ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அது வந்த பின் அமைச்சரவை கூடி நல்ல முடிவு எடுக்கும் எனவும் அம்மாநில அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா தெரிவித்தார்.

இந்நிலையில், மூன்று தலைநகரங்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஸ்டன் கன்சல்டிங் என்ற ஆலோசனை நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால், அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினத்தை ஆந்திராவின் தலைநகராக உருவாக்கலாம் என அந்நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது.

Categories

Tech |