Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது” அமைச்சர் உறுதி…!! 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் C.V சண்முகம் உறுதியளித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி திமுக சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்  ராஜா  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்..

Image result for C.V சண்முகம் சட்டசபை

இதையடுத்து பேசிய  கனிமவளத்துறை அமைச்சர் CV.சண்முகம் பேசியதில் , தமிழகத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தாலும் , தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே  திட்டம் நிறைவேற்றப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநிலத்தில் நிறைவேற்ற அந்த மாநில அரசின் அனுமதியை  மத்திய அரசு பெற்றாக வேண்டும். தமிழகத்தில் இயற்கை வாயு திட்டத்திற்கு எக்காலத்திலும் அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |