அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்திற்கு உணவு மற்றும் மருத்துவ கழகம் தடை விதித்துள்ளது
மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் தற்போது பல நாடுகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்த இந்த மருந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்த அந்நாட்டின் உணவு மற்றும் மருத்துவ கழகம் மார்ச் மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால் மருந்தை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகளை விட பக்கவிளைவுகள் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது உணவு மற்றும் மருத்துவ கழகம். ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்துவதனால் அதிக அளவு பக்க விளைவுகள் ஏற்படுவதாக கழகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.