கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக தற்போது கொடுத்துவரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய தொகுப்பு
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்துவது ஏன்.?
- ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து. அதோடு முடக்குவாதம் மற்றும் லூபஸ் போன்ற நோய்களுக்கும் இம்மருந்தை பரிந்துரைக்கின்றனர். ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் லூபஸ் ஆயுள் காப்பீடு எனவும் இந்த மருந்தை விவரித்துள்ளனர். இந்த மருந்து நாளொன்றிற்கு ஆயிரக்கணக்கான இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது.
- ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை குறைவால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது
- ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொடுப்பதனால் கொரோனாவிற்கு சரியான தீர்வு கிடைக்கும் என உறுதியான முடிவுகள் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் முந்தைய தரவுகள் மற்றும் உயிரியல் ஆய்வுகளின் அடிப்படையில் காரணமாக இந்த மருந்திற்கு ஆதரவு அளிக்கப் படுகிறது.
அமெரிக்கா வளர்ந்த நாடாக இருக்கும்பொழுது இந்தியாவிடம் ஏற்றுமதி செய்ய சொல்வது ஏன்?
- அமெரிக்காவில் மலேரியா பாதிப்பு இல்லாத காரணத்தினால் அங்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தயாரிக்கப்படுவதில்லை.
- அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்தியாவின் மருந்து நிறுவனங்களான சைடஸ் காடிலா மற்றும் இப்கா உடன் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பழமையான இறக்குமதி தடையை தளர்த்தியுள்ளது.
இந்தியாவில் HCQ உற்பத்தி
- இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உற்பத்தி செய்வதில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. உலகில் 70 சதவீதம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் வினியோகத்தை இந்தியா செய்கிறது.
- சைடஸ் காடிலா, வாலஸ் பார்மாசூட்டிகல்ஸ், இப்கா ஆய்வகங்கள் ஆகியன இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்கள் ஆகும்.
- சீனாவிலிருந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்கள் இதுவரை சீராக வந்து சேருகிறது.
- ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் 40 டன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உற்பத்தி செய்யப்படுகிறது இது தலா 200 மில்லிகிராம் அளவில் 20 கோடி மாத்திரைகளை குறிக்கின்றது
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 14 ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் தேவைப்படும். எனவே அமெரிக்க அரசாங்கம் இறக்குமதி செய்த 10 கோடி மாத்திரைகள் 71 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
மருந்தின் பக்க விளைவுகள்
- கோவிட்-19 வைரஸூக்கு எதிராக இந்த மாத்திரை பயனுள்ளதாக இருக்கும் என்று சில அறிவிப்புகள் வந்தவுடன், மக்கள் அதை வாங்கவும் பதுக்கி வைக்கவும் தொடங்கிவிட்டனர். மருத்துவ ஆலோசனையின்றி எடுத்துக் கொண்டால், இந்த மாத்திரைகள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஆகவே இம்மருந்தை மக்கள் பதுக்கி வைப்பதை தடுக்க அரசு முயற்சித்து வருகிறது.
- கொரோனாவிற்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயனுள்ளதாக அமையும் என அறிவிப்பு வெளிவந்தவுடன் மக்கள் அந்த மருந்தை வாங்கி பதுக்கி வைக்க தொடங்கியுள்ளனர். ஆனால் மருத்துவ ஆலோசனை இன்றி அந்த மருந்தை உட்கொண்டால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். எனவே மருந்துகளை பதுக்கி வைப்பதை தடுக்க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.
- அதிக அளவு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்தினால் திடீர் காய்ச்சல், கல்லீரல் பிரச்சனை, தலைவலி, இதயக்கோளாறு, பார்வைக்கோளாறு, படபடப்பு, வலிப்பு, மயக்கம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். மேலும் இது சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். அதிகப்படியாக இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் 30 நிமிடங்களுக்குள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.