ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
ஜெர்மனியில் நடந்து வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.நேற்று இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர் குன்லாவத்தை 21-18 12-21 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார் .உலகத் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள லக்சயா சென் ,அடுத்து அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யீவை எதிர்கொள்கிறார் .