ஹூண்டாய் நிறுவனம் அடுத்ததாக கிராண்ட் ஐ 10 நியாஸ் என்ற புதிய மாடல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது .
கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ10 மாடலில் உருவாக்கப்பட்ட கார்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது . மேலும் இந்த மாடலுக்கு உலகம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் அந்நிறுவனம் என கூறியுள்ளது . இந்த கார் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதில் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆஸ்டா விலையானது ரூ. 7.99 லட்சம் ஆகும் . இந்தஐ 10 மடலின் வெற்றியைத் தொடர்ந்து, இதில் மூன்றாவது தலைமுறை மாடலை இந்நிறுவனம் கிராண்ட் ஐ 10 நியோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இது ஹேட்ச்பேக் மாடல் கார்களில் இது முன்னோடியாகத் திகழும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது . இது பியரி ரெட், போலார் ஒயிட், டைபூன் சில்வர், டைட்டன் கிரே, அக்வா டீல் மற்றும் ஆல்பா புளூ ஆகிய வேரியண்ட்களில் அமைக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக , பி.எஸ்6. புகை விதிமுறைகளுக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது .இதில் , 83 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், டீசல் என்ஜின் மாடலும் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த இரண்டு மடலிலுமே மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாற்றும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது . இது மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .