Categories
அரசியல் மாநில செய்திகள்

நானும் டிவியில் பார்த்தேன்…! தப்பா இருக்கு, ரொம்ப பேசுறாரு… BJPயை துவைத்த துரை வைகோ ..!!

செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முறையான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  முதலமைச்சர் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தொடர்ந்து அதற்கு உண்டான நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கு உண்டான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இப்போது அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்,  வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கும் என்ற காரணத்தினால NIA-க்கு பரிந்துரைத்திருக்கிறார்கள்.

ஒன்றிய அரசும் அதை ஏற்றுக் கொண்டு,  தேசிய புலனாய் முகவை இந்த வழக்கத்தின் விசாரணை கையில் எடுத்திருக்கிறார்கள். பாஜக பந்த் எதற்காக அறிவிக்கிறது அதாவது ? தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, காவல்துறை அது சரியான முறையில் வழக்கை கையாளவில்லை என்றால் பந்த் அறிவிக்கலாம்.  தமிழ்நாடு காவல்துறையை பொறுத்த வரை, முறையான விசாரணை எடுத்து,  அது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்திருக்கிறார்கள்.

வழக்கை பொறுத்தவரை தேசிய புலனாய் முகமைக்கு முதலமைச்சரே பரிந்துரை செய்ததால் NIA  எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்ப எதற்காக பாஜக  பந்த் அறிவிச்சிருக்காங்க ? என்று தெரியவில்லை. தமிழ்நாடு பாஜக உடைய சில கருத்துக்களை நானும் டிவியில் பார்த்தேன். தப்பா இருக்கு, ரொம்ப பேசுறாரு, எல்லாத்தையும் அரசியலாக்குது . ஒரு மலிவான அரசியல்..  மதத்தை வைத்து அரசியல்,  மொழியால் அரசியல்,  இன்னைக்கு ஒரு சம்பவத்தை வைத்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் பாஜகவின் பந்த் தேவையில்லாத ஒன்று என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |