விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், அசீம், ஷிவின் கணேசன், அசல் கொலார் ஆகியோர் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஜி.பி முத்துவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நாளிலிருந்து ஜிபி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் தொடங்கியுள்ளது. இவர்கள் சண்டையின்போது தனலட்சுமி ஜி.பி முத்துவை பார்த்து நடிக்கிறார் என்று கூறியதால் அவர் கண்கலங்கி அழுதார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், தனலட்சுமி ஜி.பி முத்துவை பார்த்து நீங்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறீர்கள் என்ன இது என்று கேட்கிறார். அதற்கு ஜிபி முத்து எனக்கு பிக்பாஸ் வந்ததே போதும்.
எனக்கு மரியாதை கொடுக்கணும் நானும் மத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கணும் இந்த ரெண்டு விஷயம் மட்டும்தான் எனக்கு வேணும் என்றார். அதன்பிறகு அந்த பொண்ணு தனலட்சுமிக்கு என்னை விட 18, 20 வயசு கம்மியாக இருக்கும். எனக்கு இப்ப 41 வயசு ஆகுது. நான் அந்த பொண்ணு கால்ல விழ போறேன். ஆனா அந்த பொண்ணு அப்ப கூட ஒரு மரியாதையை கொடுக்க மாட்டேங்குது என்று வருத்தமாக பேசுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வெளியான நிலையில், ஜிபி முத்துவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவான ஹேஷ்டேக்கை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#Day4 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/44FGgUwUxd
— Vijay Television (@vijaytelevision) October 13, 2022