Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ஒரு விவசாயி…. ”நாற்று நட்ட முதல்வர்”…. திமுகவுக்கு புது சிக்கல் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுடன் நாற்றுநட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான பொதுமக்களும் , விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அந்த வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி சித்தமல்லி பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணியை பார்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் விளை நிலத்தில் இறங்கி நாற்று நட்டு விவசாயிகளுடன் உரையாடினார்.

கடந்த சில காலமாகவே பேசும் ஒவ்வொரு மேடைகளிலும் நான் ஒரு விவசாயி மகன் என்று மக்களிடையே பேசி கொண்டு வருகின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதை அடிக்கடி முக.ஸ்டாலின் கூட , எட்டப்பாடி பழனிச்சாமி, அடிக்கடி நான் ஒரு விவசாயி மகன் என்று சொல்லிக்கொள்கின்றார் என்று நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் தமிழக முதல்வரின் அண்மைக்கால செயல்பாடுகள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஒரு சாதாரண மகனாக , எளியவராக அணுகக்கூடிய வகையில் இருக்கின்றார். இது தமிழக முதலவரை பட்டி தொட்டியெங்கும் சிறந்த எளிமையான முதல்வராக நிலை நிறுத்துகின்றது. குறிப்பாக காவேரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என பல்வேறு விவசாய திட்டங்களை அறிவித்து அசத்தி வருகின்றார்.இன்னும் ஒரு ஆண்டுகளில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அசுர வெற்றி பெற்றுள்ளதால் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவின் செல்வாக்கை பிரதிபலிக்கின்ற தேர்தலாக இருக்க போகின்றது.

எதிர்க்கட்சியான திமுக பிரசாந்த் கிஷோரை தேர்தல் ஆலோசகராக நியமித்து தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில் அதிமுக நிலை என்ன ? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முதல்வரின் செயல்பாடுகள் தேர்தல் ஆயத்ததையே வெளிப்படுத்துகின்றது. பட்டி தொட்டி எங்கும் ஒரு விவசாயி என்று தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி வியூகத்தை திமுக எப்படி சமாளிக்க போகின்றது என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

என்னதான் இருந்தாலும் சினிமா துறையை வைத்து அரசியலுக்கு வந்த MGR , ஜெயலலிதா என தொடர்ந்த அதிமுக வரிசையில் ஒரு சாமானிய வீட்டில் பிறந்தவராக வலம் வரும் எடப்பாடி பழனிச்சாமியா ? அல்ல தமிழக முன்னாள் முதல்வர் , அரசியல் ஜாம்பவான் மறைந்த கருணாநிதியில் மகன் முக.ஸ்டாலினா ? என்றால் எளிமையாக வளம் வரும் எட்டப்பாடியாரையே மக்கள் தேர்வு செய்வார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இதனால் திமுகவுக்கு முதல்வரின் எளிமையால் புது சிக்கல் உருவாகியுள்ளது.

Categories

Tech |