இந்து சமய அறநிலைத்துறையில் பணிக்கு சேர்வோர் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு பணிகளில் அதிகாரிகளாக பொறுப்பேற்ற அனைவரும் சம்மந்தபட்ட கோவிலில் தெய்வங்கள் முன்பாக நின்று நான் ஒரு இந்து என்றும் , இந்து மதத்தில் பிறந்தவள் என்றும் , இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுக்க வேண்டும். அது தொடர்பாக உள்ள உறுதிபத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற இந்து சமயத்தின் விதி செயல்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இது தொடர்பான அனைத்தும் இந்து அறநிலைத்துறை சார்பில் இயங்கும் கோவில்களில் பின்பற்றப் படுகிறதா ? என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக கேட்டதற்கு , தற்போது வரை சாமி முன்பு உறுதிமொழி எடுக்க வில்லை என்று விளக்கம் அளித்ததன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சசி நாராயணன் மற்றும் சேசாயில் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும் , இந்து சமயத்தின் விதி முழுமையாக பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார். அரசு தரப்பு விளக்கத்தையும் இந்து இந்து சமய அறநிலைத்துறை விளக்கத்தையும் மனுவாக தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.