கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, அண்ணாமலை எவ்விதமான அடிப்படை அறிவு இல்லாமல், தன்னுடைய சொந்த கட்சி தேவைக்காக, தொடர்ந்து கோயம்புத்தூரை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து இடம்பெயர்ந்து வருகிற, IT தொழில் எல்லாம் இன்னைக்கு பெங்களூர்ல ஊழல் அதிகமா இருக்கு, லஞ்சம் அதிகமா இருக்கு, கர்நாடகாவை ஆளுகிற பாஜக சிஎம் இருக்காரு.
எங்களால் தொழில் நடத்த முடியாது என்று இண்டஸ்ட்ரியல் எல்லாம் கோயம்புத்தூருக்கு வந்துச்சு. அந்த இண்டஸ்ட்ரிலை I am a proud Kannadiga என்று சொன்ன அண்ணாமலை, மீண்டும் கர்நாடகவிற்கு கொண்டு போக நீங்க பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வராதீங்க. கோயம்புத்தூர் வந்தா தொழில் செய்ய முடியாது. கோயமுத்தூர் என்பது அசாதாரணமான சூழல் உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
இதை யாருகிட்ட பணம் வாங்கிட்டு, இப்படி சொல்றாருன்னு தெரியல. இவருடைய செயல் அமைதியை போதிப்பதாக இருந்தால் உண்மையாகவே… ஒரு ஆரோக்கியமான எதிர்கட்சியாக இருந்தால் சரியான தகவல் மாநில அரசுக்கோ அல்லது அவருடைய ஒன்றிய அரசுக்கோ அனுப்பி இருக்கவேண்டும். இதுவரைக்கும் இந்த வழக்கில் சந்தேகம் இருக்கு. எங்களுக்கு ஆதாரங்களை கொடுங்கன்னு என வழக்கை ஒப்படைத்து மூன்று நாட்கள் ஆகியும், ஒன்றிய ஏஜென்சி ஆன NIA தமிழ்நாடு போலீஸ் கிட்ட கேக்கல.
ஒன்றிய அமைச்சரான உள்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசுக்கு எந்த கடிதமும் எழுதல, சென்ட்ரல் கவர்ன்மெண்ட் தமிழ்நாடு அரசுக்கு இந்த வழக்கில் சந்தேகம் இருக்குன்னு கேட்கல. மத்திய அரசு கேட்கல, NIA ஏஜென்சி கேட்கல. ஆனா கமலாலயத்துக்கும்,ஆளுநருக்கும் அண்ணாமலைக்கும் மட்டுமே இருக்கிறது. இவர்களுடைய உள்நோக்கம் ஒரு சமூக பதற்றத்தை உண்டு பண்ணி, அரசியல் செய்வது மட்டும்தான் இருக்கிறது. மக்கள் நலன் இல்லை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கிறது என தெரிவித்தார்.