Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் கரடுமுரடான காட்டான்… ரொம்ப கஷ்டமா இருக்கு… சீமான் வேதனை

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்ணதாசன் அவர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இவர்கள் சொன்ன இடத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன். இனி அந்த வீட்டிற்கு ( நெல்லை கண்ணன் ) போகும்போது என் அப்பா உட்கார்ந்த நாற்காலி, அவர் இருந்த ஊஞ்சல் அதெல்லாம் வெறுமையாக இருக்கும் போது நமக்கு கஷ்டமாக இருக்கும்.

நானும் என் அப்பாவும், இருக்கின்ற படம் இருக்கிறது பாருங்க.. வாய்யா அப்பா வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லி திருநெல்வேலி போகும் போது நான் போனேன். மாடியில் இரண்டு பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம், அதெல்லாம் மறக்க முடியாத பதிவுகள், நிகழ்வுகள். என் அப்பாவை ஐயா மகன் உருவத்தில் பார்க்கிறேன், என் ஐயா மகன் ஒரு பேராற்றல்காரர்.

இசையை சுத்தமாக பயின்று தூய சுதியோடு பாடுவார், சிறப்பாக எழுதுவார். முடிக்கும்போது ஒவ்வொரு சிறப்பாக முடிப்பார். அண்மையில் என்னைப் பற்றி போட்டுள்ளார்..  ஐயா மகனும்,  அராஜகமும் என்றுஎழுதி ஒரு கட்டுரை போட்டுள்ளார். அதில் அவர் ஒரு மென்போக்கான ஆளு. நான்  கரடு முரடான  காட்டான். இரண்டு பேரும் ஒன்று சேர்வது எப்படி இருக்கும் ? என்று பாருங்கள். அது ஒரு காலம்,  எங்கள் வாழ்க்கை அப்படி இருந்தது என சீமான் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

Categories

Tech |