செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே அறநிலைத்துறையின் ஊழலை நாம எடுத்து பேசுறதுனால, அறநிலைத்துறையின் உடைய அதிகாரிகள் சங்கம் என் மேல 26 பொய் கேஸ்கள் போட்டு இருக்காங்க. இது பூரா அறநிலைத்துறை உடைய அந்த திருட்டு கூட்ட சங்கங்கள். அறநிலைத்துறை அதிகாரிகளின் சங்கங்கள். அதற்கு காரணம் என்ன ? அவங்க திருடுற விஷயத்தை நாம வெளியே சொல்லிடுறோம். அதனால நமக்கு வந்து இருக்கிற செய்தி ..
இது கோவில்ல இருக்கின்ற அர்ச்சகர்களுக்கு மேலே இருக்கக்கூடிய.. சர்க்கார், அதிகாரிகள் அந்த மட்டத்தில் பேசப்படுவதாக உறுதி செய்யப்படாத தகவல்.. அதனால்தான் நான் அமைச்சர் விசாரணை பண்ணனும், கமிஷனர் விசாரணை பண்ணனும், உத்தரவாதம் கொடுக்கணும். அந்த விக்கிரகங்கள் நகற்றப்பட மாட்டாது அப்படின்னு நான் கேட்டு இருக்கேன்.
ஏன்னா எனக்கு வந்து இருக்குறது உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வந்திருக்கு. அதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அரசியல் தலைவர். எனக்கு அந்த பொறுப்பு இருக்குன்னு சொல்லி இருக்கேன். நீங்கள் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்புவதற்காக இதை சொல்கிறீர்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன் என தெரிவித்தார்.