வாழ்நாளில் 4,000 நாட்கள் சிறையில் கழித்தவர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க அதிமுக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
தேவர் சிலைக்கு தங்க கவசம் அறிவித்த பெருமை அதிமுகவை சாரும். தேசிய ராணுவ படைக்கு தமிழகத்திலிருந்து படைகளை திரட்டியவர் முத்துராமலிங்கத்தேவர். சுதந்திர வேட்கையை தமிழகத்தில் விதைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். வாழ்நாளில் 4,000 நாட்கள் சிறையில் கழித்தவர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார்.
மேலும் மாண்புமிகு அம்மாவின் அரசு அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அது காலதாமதம் ஆகிறது என்ற காரணத்தினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டே நடைமுறைப்படுத்ததான் இவ்வளவு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம்.
அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் இருக்கின்றவர்கள்… ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களும் மருத்துவம் படிப்பு படிக்க வேண்டும் என்று கனவு இருக்கின்றது. அந்த கனவை நினைவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த திட்டத்தை கொண்டு வந்தோம் நான் கூட அரசு பள்ளியில் படித்த மாணவன். ஆகவே அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் உணர்வை நாங்கள் மதித்து தான் இந்த அரசாணை வெளியிட்டுள்ளோம்.