இளவரசர் ஹரி தனது இரண்டாவது குழந்தை பிறக்கப்போகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரியின் மடியில் அவரது மனைவி மேகன் தலைவைத்துப் படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதில் தன் மகன் ஆர்ச்சி அண்ணனாக போவதாக ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார். ராஜ குடும்பத்தில் வழக்கமாக குழந்தையின் பிறந்த பின்பு தான் அதற்குரிய அறிவிப்புகள் வெளியாகும். பாரம்பரிய உடை அணிந்த ஒருவர் வந்து தான் இளவரசர் அல்லது இளவரசி பிறந்திருக்கும் தகவலை அறிவிப்பார்.
ஆனால் இளவரசர் ஹரி குடும்பப் பொறுப்பில் இருந்து விலகியதால் முன்கூட்டியே இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஹரியும் மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறுவதை மகாராணியாருக்கு தெரிவிக்காமலே ஊடகங்களுக்கு நேரடியாக தகவல் அளித்தனர். இந்த சம்பவம் மகாராணிக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.
ஆனால் இம்முறை அப்படி ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால், இந்த தகவலை மகாராணிக்கு தெரிவித்த பின்னரே ஹரிஸ் வெளியில் சொல்லி இருக்கிறார். மேலும், சரியாக 37 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் காதலர் தினத்தன்று தான் ஹரியின் தாயான இளவரசி டயானா தான் கர்ப்பமுற்று இருப்பதாக தெரிவித்தார். அவரது கருவில் இருந்தது இளவரசர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.