நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்பது அமைச்சர்கள் நீங்க இருக்கிறீங்க. தம்பி உதயநிதியுடன் சேர்த்து… எங்களை போல் மாண்புமிக்க ஒரு தமிழ் சமூகம் எங்கயாவது இருக்கா ? இனி அப்படி சொல்ல கூடாது. எங்களைப் போல் ஏமாளிகள் எங்கேயாவது இருக்கிறார்களா ? உலகத்துல….
நாம எவ்வளவு தூரம் வஞ்சித்து வீழ்த்த பட்டு இருக்கின்றோம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்… ஒரு தடவை புள்ளி விவரப்படி சொல்றேன்… 2008 மைய அரசு பணிகளில் யார் யாருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு இருக்கிறது ? இடம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது ? வேலை வாய்ப்புகளில் மைய அரசு பணிகளில்… இந்தியா ஒன்றிய அரசு பணிகளில் கணக்கு….
அதுல முன்னேறிய வகுப்பினர் இவன் சொல்றான்ல… இந்த உயர்சாதினர்… முன்னேறிய வகுப்பினர் எண்ணிக்கையில 17.5 விழுக்காடுகள் தான். ஆனால் 77.2 விழுக்காடு வாய்ப்பை பெருகிறார்கள், மையரசு பணிகளிலே… அவர்களின் எண்ணிக்கைக்கு மேலாக 59.7 விழுக்காட்டை அனுபவிக்கிறார்கள். இதற்கு பெயர் என்ன சொல்றாங்க ? உன் எண்ணிக்கை விட மேலாக நீ அனுமதிக்கிறாய் அதற்குப் பெயர் ஆதிக்கம் என்று சொல்றாங்க..
இந்த ஆதிக்கத்துல…. இங்க பாருங்க 17.5 விழுக்காடுகள் இதான் முன்னேறிய வகுப்பினர். அதில் வெறும் பிராமனர் இல்லை… நாயர், நம்பூதிரி, தாகூர், முகர்ஜி எல்லாரும் இருக்காங்க. அகர்வால் எல்லாரும் இருக்கான். கீழே இறங்கி வருகின்றோம்.. 25.5 யாரு ? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மக்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள். எஸ்.டி, எஸ்.சி. அவனுக்கு 25.5 ஆனால் 17.4 தான் அனுப்பவிக்கிறோம் இதுல..
மீதி 8.1 விழுக்காடு வாய்ப்பை இழக்கிறோம் ? இதுக்கு பெயர் என்ன ? உரிய எண்ணிக்கையை விட நாம் வாய்ப்பை குறைவாக பெறுகிற போது அது அடிமைத்தனம். இதை உள்வாங்கிக்கணும்.. அதுக்கு கீழே வருகின்றோம். பிற்படுத்தப்பட்ட….. ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 57 விழுக்காடு. ஆனால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு வெறும் 5.4 விழுக்காடு. இதுவரை இதான். எவ்வளவு வாய்ப்பை இழக்கின்றோம்.
51.6 விழுக்காடு வாய்ப்பை நாம் இலக்குறோம். எவ்வளவு மோசமான கொத்தடிமை மனநிலை நமக்கு… இதை போராடி பெறாமல் இருக்கிறது. அவர் என்ன சாதி வாரி கணக்கெடுக்க சொல்லுறாரு. சாதி வேணா என்கிறார்.. ஜாதி வாரி கணக்கெடுக்க சொல்லுறாரு. சாதியை ஒழிக்க தான் டா இந்த வேலையை ஆரம்பித்து இருக்கிறேன் என தெரிவித்தார்.