திமுகவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் விருந்து கொடுத்தார். இந்த விருது வழங்கும் விழாவில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி கலந்து கொள்ளாததோடு, விருந்தில் கலந்து கொள்ள வந்தவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விருந்து விழாவின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, திமுகவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக நான் விருந்து கொடுத்துள்ளேன். நம் கலாச்சாரத்தில் இருக்கும் விருந்தோம்பல் அடிப்படையில் தான் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளேன்.
ஆனால் சில நாட்களாக வரக்கூடிய தகவல்கள் மிகுந்த வேதனை கொடுக்கிறது. அதாவது தலைவரின் பேச்சை பேச்சைக் கேட்காமல் சிலர் கட்சிக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில் சிலர் கலந்து கொள்ளாததோடு மிரட்டல் விடுத்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் சிறிய மனிதர்களாக நடந்து கொள்ளக் கூடாது. சுயமரியாதைக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். மதுரையில் என்னால் பயன் அடைந்து செய்நன்றி மறந்தவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு நாள் வீழ்ச்சி வரும். நான் படித்தவன் என்பதால் உண்மையை மட்டுமே பேசுவேன். என் அனுபவத்தையும், அறிவையும் பயன்படுத்தி தலைவரிடம் பேசினேன். எங்கள் குடும்பத்தினர் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும் என்னால் பயன் அடைந்து செய்நன்றி மறந்தவர்களுக்கு கண்டிப்பாக ஒருநாள் வீழ்ச்சி வரும். திறமையற்றவர்களை திறமையானவர்களாக காட்ட முடியாது. எது நடக்குமோ அது விரைவில் நடக்கும் என்று கூறினார்.