Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

நான் அப்பா ஆகிட்டேன்…. மகளை பாரக்க சென்ற தொழிலாளி… விபத்தில் சிக்கி மரணம்….!!

கிருஷ்ணகிரி அருகே தனது குழந்தையை பார்க்க சென்ற தொழிலாளி விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதேபகுதியில் பேக்கரி கடை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  6 மாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார். இந்நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை காண்பதற்காக தனது தங்கை பிரியங்காவுடன் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி நோக்கி சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு பின் வீடு திரும்பும் நேரத்தில்,

கரியம்பாளையம் அருகே கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு  108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதில்,

பன்னீர் செல்வம் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது தங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பன்னீர் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |