கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க என் வீட்டை நான் தருகின்றேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா அறிகுறியுடன் இருந்த 110 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.
உங்கள் நான்— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2020