Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” நான் அவரின் 2வது மனைவி” முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி…. பென்ஷன் வழங்க கோரி மனு…!!

முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கணவரின் பென்ஷன் பணத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள சின்ன குப்பத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2010 ஆம் வருடத்தில் காலமானார். இதையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி கமலம்(69) கணவனுடைய பென்ஷன் பணத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “அமைச்சராக இருந்த சுப்பிரமணியனின் முதல் மனைவி இறந்த பிறகு தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

25 வருடங்களாக அவருடன் வசித்து வந்த நிலையில் 2010ல் அவர் காலமானார். அவருடைய மாதாந்திர பென்ஷன் பணத்தை தன்னிடம் வழங்க வேண்டும் என்று கடந்த பத்து வருடங்களாக கோரிக்கை வைத்தும் வழங்கவில்லை. வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுத்த நிலையிலும் காலம்தாழ்த்தி வருகின்றனர். இதற்கு முதல் மனைவியின் மகன் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஓய்வூதியம் வழங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் எனது பேத்தியுடன் விழுப்புரத்தில் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறேன். எனவே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |