நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் காதல், சென்டிமெண்ட் என பலதரப்பட்ட கதைகளில் நடித்து இருக்கிறார். சமீபத்தில், நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் சிறந்த வெற்றி அடைந்தது.
இந்நிலையில், சாய்பல்லவி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ”தன்னிடம் இருக்கும் நகைச்சுவை தன்மையை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாக” தெரிவித்திருக்கிறார். மேலும், அதற்கேற்ற கதையுள்ள இயக்குனர்களிடம் இருந்து கதையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.