மக்களுக்கு அரசியல் எழுச்சி வர வேண்டும், பின்னர் நான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் ? கட்சியின் பெயரை அறிவிப்பார் ? என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று . ஒரு எழுச்சி மக்களிடம் ஏற்பட்ட பிறகுதான் அரசியல் வருவேன் என கூறி அவர் வைத்துள்ள 3 திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.இதனால் அரசியலுக்கு அவர் வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த அவர் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நான் சொன்ன கருத்தை பாமர மக்களிடம் , பேசுகின்ற , சிந்திக்க வகையில் கொண்டு சேர்த்த ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் , சமூக வலைதளங்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கும் , ரசிகர்களுக்கும் எனது நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்த ரஜினியிடம் அவரின் இல்லத்தில் , மக்களிடம் எழுச்சி வர வேண்டுமென பேசினீர்கள் , பாமர மக்கள் அடுத்து என்னவென்று எதிர்பார்த்து காத்து உள்ளார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஒற்றை வரியில், பாமர மக்களைப் போலவே நானும் எழுச்சியைஎதிர்பார்த்து காத்திருப்பதாக பதில் அளித்தார்.