நான் பெரிய தொழிலதிபர் அல்ல , நான் ஒரு விவசாயி என்று சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.