ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், இப்போது அது மாறிவிட்டதா ? மகளிர் ஆதரவு அதிமுகவுக்கு குறைகின்றது என்ற கேள்விக்கு,
நான் வந்துட்டேன் எப்படி குறையும் ? நான் வந்துட்டா என எங்களுடைய மகளிரை மட்டும் சொல்லல நான்… தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள மகளிரையும் நான் சொல்றேன். எல்லாருக்கும் சொல்றேன். யாரையும் யாரும் விழுங்க முடியாது. அதெல்லாம் சும்மா வாய்க்கு சொல்லிட்டு போலாம். அந்த மாதிரி நிலைமை எல்லாம் கிடையாது.
அதிமுகவுக்கு பிடித்த நோய் எடப்பாடி பழனிசாமி. அதற்க்கு ஒரே தீர்வு ஓபிஎஸ் என ஓபிஎஸ் நடத்திய கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, என்னை பொறுத்தவரைக்கு நல்ல டாக்டர் இருந்தா நோயாளிகளை காப்பாற்றலாம். மக்களவை தேர்தலுக்கு கொஞ்ச நாள் தான் இருக்கு. நிச்சயமாக இணைப்பை செய்வோம். நல்ல வெற்றியை பெறுவோம். அந்த வெற்றி கூட தமிழக மக்களுக்காக தான் சொல்றேன். எங்களை பொறுத்தவரைக்கும் நான் பயந்துகிட்டு ஓடி ஒளியுற ஆளு கிடையாது.
தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேட்டுப் பெறுவோம். அதை செய்ற தைரியமும் இருக்கு, அந்த நம்பிக்கையும் இருக்கு. அதிமுகவை இணைக்கணும் என நீங்க சொல்லுறீங்க. ஆனால் இணையாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தலைமை பொறுப்புக்கு வர நினைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, நான் சொல்றேன்ல.. ஒரு வீட்ல பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள். தாய் ஒண்ணுதானே. அது தான் நான் சொல்றேன்.