Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அப்துல் கலாம் அல்ல”…. விரைவில் காதல் திருமணம் செய்வேன்….. நடிகர் விஷால் ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு 57 வகையான சீர்வரிசைகள் கொடுத்து நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து அவர்களை வாழ்த்தினார். அதன் பிறகு நடிகர் விஷால் பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை உடனே செய்து விடுவேன். தற்போது இலவச திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதையும் செய்துவிட்டேன்.

படப்பிடிப்பு தளங்களில் சில பல பிரச்சனைகள் நடந்தது. இருப்பினும் அதில் இருந்து மீண்டு வந்து விட்டேன். எனக்கு பட்டு வேஷ்டி சட்டை அணிவது மிகவும் பிடிக்கும். அதனால்தான் தற்போது கூட பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வந்துள்ளேன். நடிகர் சங்கத்தில் 3500 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய வளர்ச்சிக்காக நான் பாடுபடுகிறேன். அவர்களுடைய மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி. நான் திரைத்துறையின் அப்துல் கலாம் அல்ல. நடிகர் சங்கம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். மேலும் நான் காதல் திருமணம் தான் செய்வேன் என்று விஷால் கூறினார்.

Categories

Tech |