Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எனக்கு திருப்தி இல்லை…. ஏமாந்து போனேன்…. நடிகர் ரஜினி வேதனை …!!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

இது குறித்து போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு வெளியே செய்தியர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்குப் பிறகு மாவட்ட செயலாளரை சந்தித்து  பேசினேன். நிறைய கேள்விகளுக்கு பதில் கொடுத்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டோம், அவங்களுக்கெல்லாம் ரொம்ப திருப்தி. ஆனால் நான் ஒரு விஷயத்தில் ஏமாற்றமடைந்தேன். எனக்கு திருப்தி கிடையாது . நேரம் வரும் போது அது பற்றி சொல்கின்றேன் என்று தெரிவித்தார்.

Categories

Tech |