கரூர் மாவட்டத்தில் தாய் இல்லாத உலகத்தில் நானும் வாழ மாட்டேன் என தாயுடன் மகனும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி. இவரது மகன் ரங்கராஜன் இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். அமுதவல்லி தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் ரங்கராஜன் அதே பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அமுதவல்லி திடீரென கழிப்பறையில் வலிக்கி விழுந்து அவருக்கு இடுப்புப் பகுதியில் பலத்த அடி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவருக்கு வலி குறையவே இல்லை. அதேபோல் நேற்றையதினம் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டு உள்ளது. இந்த முறை ஏற்பட்ட இடுப்பு வலி அவரை வலியின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது. இதனால் வலியில் துடித்த அமுதவல்லி விஷ மாத்திரையை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து தாய் மாத்திரை உட்கொண்டதை அறிந்த ரங்கராஜன் தாய் இல்லாத உலகில் தானும் வாழ முடியாது என்று தாய் அருந்திய அதே விஷம் மாத்திரையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின் காலை அமுதவள்ளி இறந்து கிடந்ததை பார்த்த மகாலட்சுமி கணவரை எழுப்ப முயன்ற பொழுது அவரும் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் இறந்தது விட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அமுதவல்லி மற்றும் ரங்கராஜன் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.