Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடியா இருக்கேன்…! என் பக்கத்துல வாங்க… இல்லை வேற இடத்துக்கு போவோமா… எடப்பாடிக்கு சவால் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, தலைமை அலுவலகத்தில் உக்கார்ந்து போட்டோமே செயற்குழு… அந்த தீர்மானத்தினுடைய நகல் இது தான். நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் வருகிறேன், இந்த பத்திரிகையாளர்கள் முன்பு பழனிச்சாமி வருவதாக இருந்தால் நானும் நிற்க தயார், இரண்டு பேரும் சட்ட ரீதியாக விளையாடுவோம் வாங்க.

யாரும் பெரிய சீனியர் வழக்கறிஞர் எல்லாம் எனக்கு தேவை இல்லை. இங்கே வந்து, என் பக்கத்துல நில்லுங்க. ஒரு இடத்தை தேர்வு செய்யுங்க. நீங்களா ? நானா என பாத்துருதேன். சட்டவிதி 20-ஐ திருத்தி தான், 43 கொண்டு வந்து,  12.9.2017 அந்த பொதுக்குழுவில் வைக்க வேண்டும் என்று சொல்லும்போது,  இது கட்டுப்படாது.

இதை திருத்துவதற்கோ,  மாற்றுவதற்கோ 5 வருடம் ஒருங்கிணைப்பாளரை, இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என்பது தான் சட்ட விதி.நீங்கள் ஏன் பேட்டியில் உலறுகிறீர்கள். அவர் என்ன பேசுகிறார் என்று புரிய மாட்டேங்குது ? அவர் பாட்டுக்கு உளறிக் கொண்டிருக்கிறார். அன்னைக்கு சொன்னார் பிரிவு உபச்சார விழாவை மாற்றி பிரிவு விபச்சார விழா என்று…  உங்களுக்கு தான் பேச வரவில்லை என்றால் என்னை மாதிரி பேசுகின்ற நபர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

வந்து மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள், பதவி வெறி என்று.. யாருக்கு பதவி வெறி? இப்பவே நான் வெளியே சென்று விடுகிறேன்.அடுத்த நிமிடம் ஓபிஎஸ் அண்ணண் என பேசவில்லை.  எல்லோரும் அதே முடிவு தான். அவரும் பேச மாட்டாரு.  தவறாக ஒரு இடத்தில் ஓபிஎஸ் அண்ணன் உங்களைப் பற்றி கூறி இருக்கிறாரா?

இல்லைன்னா செயற்குழு தீர்மானத்தை நிறைவேற்றி,  பொது குழுவிற்கு செல்ல வேண்டுமென்று நிலையில் இருக்கும்போது, என்றைக்காவது வேறு ஏதாவது சொல்கிறாரா? 23 விதிகளுக்கும் ஒப்புக்கொண்டு தான் கையெழுத்து போட்டுள்ளார். அதுதான் பொதுக்குழுவிற்கு செல்கின்ற நிலைமை என தெரிவித்தார்.

Categories

Tech |