திமுக தலைவர் மு க ஸ்டாலின் யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்திருக்கிறார் என எ.வ வேலு தெரிவித்துள்ளார்.
திமுகவில் பொருளாளராக டிஆர் பாலுவும் பொதுச் செயலாளராக துரை முருகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த பொழுது இவர்களுக்கு போட்டியாக எந்த ஒரு வேட்புமனு தாக்கலும் இல்லாத காரணத்தால் போட்டிகள் இல்லாமல் இந்த பதவியை பெற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கான அதிகாரப்பூர்வ பதவியை வருகின்ற 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்னை அண்ணா அறிவாலயம் வந்தபோது, எ.வ.வேலுவும் உடன் வந்திருந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, எந்த நேரத்தில், யார் யாருக்கு என்ன பொறுப்பு, தர வேண்டுமோ அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பதவி சரியாக கொடுத்துள்ளார் என்றும் தனக்கு எந்த பதவி கொடுத்தாலும் அதை பொறுப்பேற்று செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.