பெண்களை இழிவு படுத்தியது யார் என்று விவாதிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மோடி அரசுக்கு சேவை செய்யக்கூடிய அரசாக செயல்படுகிறது காரணத்தினால் என் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது. நான் அதை வரவேற்கிறேன். நீதிமன்றத்திற்கு வாருங்கள் மனோ நூலில் என்ன வண்டவாளம் இருக்கிறது என்பதை நாம் விவாதிப்போம். யார் உண்மையில் பெண்களை இழிவுபடுத்துகிறது திருமாவளவனா ? அல்ல மனு நூலா ? என்பதை நீதிமன்றத்தில் விவாதிப்போம.
பெண்களை இழிவு செய்வது யார் என்பதை விவாதிப்போம், அது ஒரு வரலாறு ஆகட்டும். எனவே வழக்கு பதிவு செய்ததை நான் வரவேற்க கடமைப் பட்டிருக்கிறேன். அதே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் பெண்களை எவ்வளவு இழிவு படுத்தி இருக்கிறார்கள் ? கேவலப்படுத்துகிறார்கள் ? எஸ் வி சேகர் போன்றவர்கள், எச் ராஜா போன்றவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவரான யோகி எந்த அளவுக்கு மிக மோசமாக பெண்களை இழிவுபடுத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பேசியவர்கள் மீது தமிழக அரசு இதுவரை வழக்கு தொடுத்திருக்கிறதா ? தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். வழக்கு தொடுத்தது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பெண்களை இழிவுபடுத்தியது மனுவா அல்லது விடுதலை சிறுத்தைகள் யார் என்பதை நீதிமன்றத்தில் விவாதிப்போம் என்று இந்த நேரத்தில் நான் சவால் விட கடமைப்பட்டிருக்கின்றோம் என திருமாவளவன் தெரிவித்தார்.