தனது மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த இளைஞன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்
கனடாவில் உள்ள மார்க்கம் பகுதியை சேர்ந்த சமன் என்பவர் தனது பெற்றோர் பாட்டி மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ளார். குடியிருப்பு ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு சென்றுள்ளது. இதனால் விரைந்து சென்றவர்கள் வீட்டில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து சமனை உடனடியாக கைது செய்தனர். வீட்டில் உள்ளே தாய் மும்தாஜ் பேகம், தந்தை மோனிரூஸ் சமன் பாட்டி ஃபிரோசா பேகம் சகோதரி மலேசா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சமன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 25 வருடங்கள் அவர் ஜாமினில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அதோடு 40 வருடங்கள் அவர் ஜாமீன் விண்ணப்பிக்கக் கூட முடியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு இறுதி கட்ட விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த சமயம் அனைவரிடமும் சமன் மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போது பேசிய அவர் “எனது செயலால் பாதிப்படைந்து அனைவரிடமும் நான் மன்னிக்க வேண்டுகிறேன்” நண்பர்களும் உறவினர்களும் என்னை மன்னிக்க வேண்டும். அவர்கள் என்னிடம் இதனை எதிர்பார்த்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.