திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, 1939-இல் ஆதிதிராவிடரை, ஒரு நாடாரை, ஒரு செட்டியார் தூக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம் ? ஜாதியாக இருந்தால் பிரிந்திருப்பார்கள், மொழியால் ஒன்று சேர்ந்தார்கள். மொழி ஒன்று சேர்ப்பது மட்டுமல்ல இல்ல, எல்லா சுடுகாடும் தனித்தனியாக இருக்கிறது, சென்னையில் போய் பாருங்கள்..
தாளமுத்து, நடராஜன் ஒரு ஆதிதிராவிடன், ஒரு நாடார். பக்கத்து பக்கத்தில் புதைத்த வரலாறு 1939இல் இந்த தமிழ்நாடு தான். சைவ பிள்ளைமாரில் பிறந்து முதன் முதலில் எம்.ஏ படித்து வேலை கிடைக்காமல், ஹைகோர்ட்டுக்கு போக முடியாமல், காசு இல்லாமல், பக்கவாதம் வந்து, காசிப்பிள்ளை படுத்து கிடக்கிறார்.
அவரை காப்பாற்றுங்கள் என்று சொன்ன பிறகு, வாழ்நாளெல்லாம் சிவன் சிவன் என்று சிவன் தொண்டு செய்த பழுத்த தமிழறிஞர் சட்ட அறிஞர் காசி பிள்ளையை காப்பாற்றுவதற்காக கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் மாதம் 30 ரூபாய் அவர் மரணிக்கின்ற வரை பணம் அனுப்பினார்.
கேட்டால் மதம் என்கிறீர்கள் ? ஒரே மாதத்தில் இருந்த சி.பி ராமசாமி ஐயர் அதே மாதத்தில் இருந்த காசிபிள்ளையை வேலைக்கு விடாமல் வறுமையில் சாகடித்த போது, பெரியார் காப்பாற்றினார். என்ன காரணம் ? நான் பகிரங்கமாக சொல்கிறேன்… அவர் சூத்திரர் என்பதனாலே தானே. மதம் உங்களை பிரிக்கும், ஜாதி உங்களை பிரிக்கும், மொழி மட்டும் தான் உங்களை சேர்க்கும் என தெரிவித்தார்.