விடுதலை புலிகள் மீது இந்தியா போட்டுள்ள தடையை நாங்கள் மதிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ் இளம் தலைமுறையினர் வந்து எங்கே எல்லாம் இனம் எழுச்சி கொண்டு வீடுவார்களோ என அவர்களின் முன்னோர்களை சாதிய குறியீடாக மாத்திடார்கள். புலித்தேவன், வேலுநாச்சியர், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை என எங்களின் அடையாளங்களை ஒரு ஜாதிய குறியீடாக மாற்றி விட்டார்கள். இதையெல்லாம் நொறுக்கி தமிழ்தேசிய இளைஞர் – பிள்ளைகளை ஒன்றிணைக்க கூடிய பேராற்றல் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கு உண்டு.
சீமான் என்ற ஒரு எளிய மகன் பேசிக்கொண்டிருக்கும் எல்லா இடத்துலயும், கைதட்டி பிரபாகரன் கோட்பாடுகளை… பிரபாகரன் பெயரை உச்சரித்து சொல்லும்போது பேரெழுச்சி பெறுகின்றனர். நாங்கள் பேசும் எல்லா இடங்களிலும் உளவுத்துறை குறிப்பெடுத்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ் தேசிய மக்கள் எழுச்சி கொண்டு…. அரசியல் எழுச்சி பெற்று பெரும் படையாக மாறி விடுவாகளோ என இந்தியாவில் விடுதலை புலிகளுக்கான தடையை நீடித்து கிட்டே இருக்கு. அதுல 37 காரணத்தைச் சொல்லி இருக்கு.நீதிமன்றத்தில் அரசு சொன்ன காரணத்தில் 17 இடத்தில என்னுடைய பெயர் சொல்லி இருக்கு.
எனவே விடுதலை புலிகள் மீதான தடை என்ற இந்த சங்கிலியை ஒவ்வொன்றாக உடைக்க வேண்டும். முதலில் சுவீடன், இப்போ பிரிட்டனில் நகர்த்தி… இப்படி ஒவ்வொரு நாடாக நகர்த்தி நகர்த்தி வருகின்றோம். நான் முதலமைச்சர் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க ? இந்தியா தடை வைத்து என்ன பண்ணப் போகுது ? இந்தியாவுல தட வச்சிக்கிறேன், இது தமிழ்நாடு இங்க தடை இல்லை என்று சொன்னா என்ன பண்ணுவீங்க ? உடனே அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்பார்கள். வாங்க என் கூட உட்கார்ந்து ஒரு மணிநேரம் அரசியலமைப்பு சட்டத்தை பேசுவோம்.
இனி யாராவது அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் பேசுகிறார்… அரசியலமைப்பு சட்டமே தெரியாமல் பேசுகிறார் என்று சொன்னால்…. தெரிந்த மேதைகள் எல்லாம் ஒரு தடவை வாங்கலாம் என் கூட, ஒரு பொதுவான விவாதம் நடத்துவோம். ஒரே நாடு, இது அரசியல்அமைப்பு சட்டத்தில்இருக்கா…. ஒரே வரி இது அரசியல்அமைப்பு சட்டத்தில்இருக்கா…. ஒரே ரேஷன் கார்டு இது அரசியல்அமைப்பு சட்டத்தில்இருக்கா…. அதெல்லாம் இருக்குதா சொல்லுங்க.
இதையெல்லாம் ஒரு சர்வாதிகார போக்குனு கூட சொல்ல முடியாது. கொடுங்கோன்மை போக்கு இப்படியே போய்கிட்டு இருக்கு… எந்த மாநிலத்திலயும் உரிமை இருக்கக் கூடாது. அந்த மாநிலத்தில் இருக்கிறது ஒரு மேஸ்திரி மாரி இருக்கணும். அப்படித்தான் இதனை கட்டமைக்க பார்க்கிறார்கள். அதனால நாங்கள் விடுதலை புலிகள் மீது இந்தியா போட்டு இருக்கிற தடையை மதிக்கவில்லை. செருப்பு காலில் போட்டு மிதிக்கின்றோம் என சீமான் தெரிவித்துள்ளார்.