நடிகை தமன்னா மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போதுள்ள திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் மாறியுள்ளது.
ஆகையால் சினிமாவைப் பற்றியும் அவர்களது பார்வை இனிமேல் மாறக்கூடும். தனி ஒரு நடிகருக்காக எந்த ரசிகரும் இனி படங்களை பார்க்க மாட்டார்கள். படத்தின் கதை மிகவும் வலுவாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள். இந்நிலையில் எனக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் கிரைம் திரில்லர் கதைகளில் நடிக்க இருந்த குறை தற்போது வெளியாகியுள்ள நாவம்பர் ஸ்டோரி மூலம் நிறைவேறியுள்ளது. இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருந்தது என்று கூறியுள்ளார்.