தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடிகை நயன்தாராவிடம் நடிகர் விஜயுடன் சேர்ந்து கோடம்பாக்கம் ஏரியா, நடிகர் ரஜினியுடன் சேர்ந்து பல்லேலக்கா போன்ற பாடல்களில் ஆடியது எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயன்தாரா நான் அந்த நேரத்தில் அது போன்ற பாடல்களில் ஆடுவதற்கு பலரும் பல கருத்துக்களை சொன்னார்கள்.
நான் ஸ்பெஷல் பாடல்களில் நடனம் ஆடினால் அதன் பின் அப்படிப்பட்ட வாய்ப்புகள் மட்டும் தான் வரும் எனக்கு நிறைய பேர் அட்வைஸ் சொன்னார்கள். ஆனால் ஸ்பெஷல் பாடலில் ஆடுவது ஸ்பெஷலான விஷயம். நான் ஸ்பெஷல் ஆக இருப்பதால்தான் என்னை ஸ்பெஷல் பாடல்களில் ஆடுவதற்கு அழைக்கிறார்கள். அது எப்படி இருக்கும் என நான் பார்க்கிறேன். அது லேர்னிங் ப்ராசஸ் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை நயன்தாராவின் பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.