Categories
மாநில செய்திகள்

“I AM WAITING” 2024….. ஒரு கோடி வாக்குகளை நோக்கி…. அசுர வளர்ச்சியில் நாம் தமிழர்…. சீமான் புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த இரண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வியூகத்துடன் நகர்ந்து வருகின்றன. அதிலும் திமுக, அதிமுக கட்சிகள் கடுமையான போட்டிகளை சந்திக்க உள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அடுத்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டியும் நிலவலாம். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால் திமுக, அதிமுக செல்வாக்கு உள்ள இடங்களில் வாக்குகளை கணிசமாக பிரித்து செல்ல சில இடங்களில் மூன்றாவது இடத்தையும் சில இடங்களில் இரண்டாவது இடத்தையும் பிடிக்கும் என்று அந்த கட்சியினர் உறுதியாக உள்ளனர். அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் முதலாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சி 294 தொகுதிகளின் தனித்து போட்டி 1.8% வாக்களை பெற்றது. அதனை போல 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 3.87% வாக்குகளை பெற்றது.

இது கட்சிக்கு மேலும் செல்வாக்கை கூட்டியது. 2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் 7% வாக்குகளை பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதுவரை இரு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1.7% வாக்கு வாங்கி, அதுவும் கூட்டணி இன்றி வளர்த்துக் கொண்ட நாம் தமிழர் கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதை இலக்காக வைத்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் கூறியது, கூட்டணி அல்லாத பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு மற்ற கட்சிகளை போல இவ்வளவு வாக்குகளை வாங்கி செல்வாக்கை நிரூபித்தால் போதும், கட்சியின் சின்னத்தை உறுதிப்படுத்தினால் போதும் என்ற குறுகிய நோக்கம் கிடையாது. தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்ற எங்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அதனை நோக்கி செல்கிறோம். எங்களது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான். அதற்கான முன்னோட்டமாக பாராளுமன்ற தேர்தல் இருக்கும் என நம்புகிறோம்.

மேலும் தேசிய அளவில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதும் கூட தேர்தல் கழகத்தை சந்தித்து நான்கு மடங்கு வளர்ச்சியை பெற்றோம்‌ தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தாலும் வாக்கு சதவீதம் பெருகி வருகிறது. திமுகவில், அதிமுகவிலும் பயணித்து வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் இல்லை. அரசியல் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல், எந்த நாட்டுமும் இல்லாமல், விலகி நிற்பவர்கள் அவர்களுக்கான ஒரு சக்தி தேவை என்பதற்காக நாம் தமிழர் கட்சியை நோக்கி நகர்கின்றனர். கூட்டணி வைத்துள்ள கட்சிகளை சார்ந்த வாக்காளர்கள் ஏமார்ந்து நிற்கின்றனர். அந்த இடத்துக்கு நாங்கள் செல்ல விரும்பவில்லை. தற்காலிக தோல்விக்கு பயந்து நிரந்தரமாக மக்களின் நம்பிக்கை இழக்க நாம் தமிழர் கட்சி விரும்பவில்லை. வெற்றி தொல்விக்கு அப்பாற்பட்டு எந்த சமரசம் செய்யாமல் களத்தில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பயணிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |