தமிழ் சினிமாவில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்த நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ரிலீசான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த விமர்சனங்களுக்கு அல்போன்ஸ் புத்திரன் பதிலடி கொடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் மணீஷ் நாராயணன், பரத்வாஜ் ரங்கன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் ஆகியோரின் விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன். என்னுடைய உழைப்பிற்கு இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.