அடுத்து வருகின்ற தேர்தலில் மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமைவதற்கு அடித்தளமாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என சிவி சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நான் கேட்கிறேன்… ஸ்டாலினை நேரடியாக கேட்கிறேன், தைரியம் இருந்தால்… உங்களுக்கு தைரியம் இருந்தால் 202 அறிக்கைகளை உங்களுடைய தேர்தல் அறிக்கை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1, 2 என்று சொல்லுங்கள் இந்த அறிக்கை ஒன்றாவது தேர்தல்அறிக்கை நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது தேர்தல்அறிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பத்தாவது தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு தைரியம் இருந்தால் பொது வெளியிலேயே உங்களுடைய தேர்தல் அறிக்கையை வைத்து இந்த 202 தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று உங்களுக்கு சொல்வதற்கு தைரியம் இருக்கிறதா ? கிடையாது. ஆகவே மக்களை ஏமாளிகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற அரசுக்கு.. இந்த திமுக அரசுக்கு இந்த தேர்தலிலேயே மிகப் பெரிய பாடத்தை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த தேர்தல் என்பது ஏதோ உள்ளாட்சி தேர்தல் என மட்டும் தயவு செய்து நினைத்துவிடாதீர்கள்.
மீண்டும் மாண்புமிகு அம்மா கூறியது போல எனக்குப் பிறகும் இந்த இயக்கம் 100 ஆண்டு காலத்திற்கு நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்று சொன்ன அம்மாவுடைய வார்த்தை, கனவு நினைவாக வேண்டும் என்றால் அடுத்து வருகின்ற தேர்தலில் மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமைவதற்கு அடித்தளமாக இந்த அரசுக்கு எச்சரிக்கை விடும் விதமாக… இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். யாரு வேட்பாளர் என்பதை பார்க்காமல்…. நம்முடைய வேட்பாளர் இரட்டை இலை, இரட்டை இல்லை வெற்றி பெற வேண்டும். மீண்டும் அம்மா ஆட்சி நமது எடப்பாடியார் தலைமையிலேயே அமையவேண்டும் என்று கூறியுள்ளார்.