Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பா ஆகிட்டேன்…. பிக்பாஸில் சந்தோஷப்பட்ட சென்ராயன்… BB ஜோடியில் அழகிய குடும்பம் அறிமுகம்….!!!

பிக்பாஸில் அப்பா ஆகிட்டேன் என்று சந்தோஷப்பட்ட நடிகர் சென்ராயன் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் நடிகர் சென்ராயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவருக்கு அவரது மனைவி மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேரில் வந்து தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறியுள்ளார்.

அப்போது நடிகர் சென்ராயன் நான் அப்பாவாக போகிறேன் என்று கத்தி கூறினார். இந்த விஷயம் அப்போது மிகவும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் BB  ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் சென்ட்ராயன் தனது 2 மகன்கள் மற்றும் மனைவியுடன் வந்து தன் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த அழகிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

Categories

Tech |