Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஒரு முறை பிச்சை கேட்டேன்”….. ஆனால் அது வீண் போகவில்லை.‌…. நடிகர் விஷால் நெகிழ்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சென்னை மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்ததோடு 57 வகையான சீர்வரிசை பொருட்களையும் கொடுத்து தம்பதிகளுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்து அவர்களை வாழ்த்தினார்.

இந்த விழாவின்போது நடிகர் விஷால் பேசியதாவது, எனக்கு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதில் மிகவும் சந்தோஷம் கிடைக்கிறது. எனக்கு யாரிடமும் பிச்சை கேட்கும் பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு முறை ஒரு மாணவியின் கல்விக்காக நான் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் பிச்சை கேட்டுள்ளேன். நான் பிச்சை கேட்டு அந்த மாணவியை கல்லூரியில் படிக்க வைத்தேன். அந்த மாணவி தற்போது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும் ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது மூலம் எனக்கு அலாதி மகிழ்ச்சி கிடைக்கிறது என்று கூறினார் ‌

Categories

Tech |