ரஜினிகாந்த் புனித் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, புனித் ராஜ்குமாரின் குடும்பத்திற்கு நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் பல நடிகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் புனித் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்…” என பதிவிட்டிருக்கிறார்.
நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்…
Rest in peace my child https://t.co/ebAa5NhJvj— Rajinikanth (@rajinikanth) November 10, 2021