Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்னால இப்படியே இருக்க முடியாது – EPSயை நோக்கி பாய்ந்த OPS …..!!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டம் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. செயற்குழு கூட்ட முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்று வருகின்ற ஏழாம் தேதி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

இதனிடையே நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் சுட்டிக்காட்டி இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு…

தான் இந்த ஆட்சி காலத்தில் மட்டும் துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன் என்றும்,  வரும் ஆட்சி காலத்திலும் என்னால் துணை முதல்வராக தொடர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நான் ஜெயலலிதாவால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டேன் என்று  முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கு முதலமைச்சரும் சரியான பதிலடி கொடுத்துள்ளார். அப்போது முதல்வர் கூறும்போது நான் மட்டுமல்ல, நீங்களும் சசிகலாவால் தான் முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டீர்கள்.

இந்த ஆட்சி காலத்தில் என்ன குறை ? இந்த ஆட்சியை பிரதமரே பாராட்டியுள்ளார் என்றெல்லாம் அடுக்கடுக்கான வாதங்களை முன் வைத்துள்ளனர். தமிழக முதல்வர், துணை முதல்வர் களுக்கு இடையே செயற்குழுவில் வாக்குவாதம் நடைபெற்றது தொண்டர்களை கவலையடைய வைத்துள்ளது.

Categories

Tech |