Categories
தேசிய செய்திகள்

“என்னால எதுவுமே பண்ண முடியாதாம்” அதான் இந்த 10…. பகீர் வாக்குமூலம்…!!

இளைஞர் ஒருவர் 10க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே உள்ள குரு கிராமம் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களில் மூன்று பேர் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாததால் குழப்பத்தில் இருந்த காவல்துறையினர், தங்களுடைய விசாரணை தீவிரமாக நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் 250 முதல் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகம்மது ராஜு(21) என்பவரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் வாக்குமூலங்கள் அளித்துள்ளார்.வாக்குமூலத்தில் அவர் கூறுகையில், “என்னுடைய சிறு வயதில் இருந்தே என்னை எல்லோரும் உன்னால் எதுவும் முடியாது, உன்னால் எதுவும் செய்ய இயலாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான் நான் என்னால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த உலகிற்கு காண்பித்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சீரியல் கில்லர் சுமார் 10க்கும் மேற்பட்ட கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.

Categories

Tech |