திருவாரூர் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்துள்ள நெடுஞ்சேரியில் முருகானந்தம்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சேரி ஊராட்சி தலைவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து கடனை வாங்கிய முருகானந்தம் அதனை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார். இதனைதொடர்ந்து வங்கி அதிகாரிகள் கடனை திரும்ப செலுத்துமாறு குறித்துள்ளனர். இருப்பினும் அவர் கடனை திரும்ப செலுத்தாமல் இருந்ததால் வங்கி அதிகாரிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
மேலும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்த முருகானந்தம் மனமுடைந்து நேற்று முன்தினம் சோங்காலிபுரத்தில் உள்ள ஒரு வயல் பகுதியில் விஷம் குதித்துள்ளார். இந்நிலையில்மயக்கமடைந்த நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இதுகுறித்து தகவலறிந்து சென்ற குடவாசல் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.