தன்னை யாரோ பின் தொடர்வதாக அமைச்சர் கூறியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக கட்சியை சேர்ந்தவர் ஆர்.பி உதயகுமார். இவர் கடந்த 2011ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2014ஆம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதால் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது பேசுகையில், “நான் தற்போது எதையும் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். எனது வீட்டிலும் பேச முடியவில்லை, வெளியில் வந்தாலும் பேச முடியவில்லை. எங்கோ ஐபேக் ஒன்று இருக்கிறது. நான் எது பேசினாலும் அதை ஐந்து நிமிடத்தில் போட்டு விடுகிறார்கள். மேலும் என்னிடம் ஒருவரை ரகசியமாக போட்டு வைத்திருக்கிறார்கள். எனவே எனக்கு பின்னாலேயே கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள்” என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.